தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர உள்ள ‘அகத்திணை’ படத்தின் தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த், “சினிமா மீது தான் கொண்ட அபரித ஆர்வத்தால்தான் இன்று தயாரிப்பாளர் அந்தஸ்தை அடைந்திருக்கிறேன்..” என்கிறார்.
“எண்ணுகின்ற எண்ணம் சிறப்பாக இருந்தால் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டாய் மாறும் என்று நினைப்பவன் நான்.
அதனால்தான் சின்ன வயதில் ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். சில காரணங்களால் அந்த படம் தொடரப்படவில்லை. காலேஜ் புல்லட் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
அதுவும் சரிப்பட்டு வராமல் போகவே எங்கள் குடும்பத் தொழிலான கட்டுமான தொழிலையே தொடர்ந்து செய்தேன். அதில் 20 வருடங்கள் கடுமையாக உழைத்து முன்னேறியிருக்கிறேன்.
இப்போது எனது லட்சியமான கலைத்துறைக்கு ஒரு தயாரிப்பாளனாக ‘அகத்திணை’ படத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் U.P.மருது சொன்ன கதை பேமிலி ஓரியண்ட் படமாக இருந்ததால் உடனே தயாரிக்க முன் வந்தேன். படம் முடிவடைந்துவிட்டது. படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தந்து என்னையும் நடிகனாக்கிய இயக்குனர் மருதுவுக்கு எனது நன்றி. நல்ல கதாபாத்திரம் எது வந்தாலும் நான் தொடர்ந்து நடிக்கத் தயார்..” என்கிறார் T.R.ஸ்ரீகாந்த்.









