full screen background image

‘சலீம்’ திரைப்படமும் காப்பிதான்..

‘சலீம்’ திரைப்படமும் காப்பிதான்..

இதுவும் காப்பி வகை படம்தான்..! ‘சலீம்’ படத்தின் முற்பாதி முழுவதும் ‘பிங்பாங்'(BingBang) என்ற பெயரில் 2007-ல் வெளிவந்த கொரியன் திரைப்படத்தின் காப்பிதான்.. காட்சிகளும் அப்படியே..!

இடைவேளைக்கு பின்பு ‘சலீம்’ படத்தின் கதை வேறு.. ‘பிங்பாங்’ படத்தின் கதை வேறு.. ஆனால் படத்தின் அடித்தளம் இரண்டுமே ஒன்றுதான்..!

‘சலீம்’ படத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. கொரியன் படத்தில் ஆகிவிட்டது.. ஒரு பையனே இருக்கிறான். அதில் மனைவியாக வரப் போகும் பெண் பிரச்சினை.. இதில் மனைவியே பிரச்சினை.. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை சரியாக கீப்அப் செய்ய நினைக்கும் ஹீரோக்கள் இரண்டிலும் ஒன்று..!

மனைவி டைவர்ஸ் கேட்கிறாள். அலுவலகத்தில் ஊழலுக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் டிஸ்மிஸ் செய்கிறார் பாஸ். தமிழ்ப் படம் போலவே கொரியன் படத்திலும் ஹீரோவை ஹோட்டல் விருந்துக்கு அங்கே வைத்து அவமானப்படுத்துகிறார் பாஸ்.

மனதளவில் நொறுங்கிப் போய் குடி போதையில் வெளியில் வருகிறார்கள் ஹீரோக்கள்.. புலம்புகிறார்கள்.. திட்டுகிறார்கள். பாதசாரிகளை மிரட்டுகிறார்கள். டிராபிக்கை நிறுத்துகிறார்கள். ஓட்டுநர்களை பயமுறுத்துகிறார்கள். போலீஸிடம் சண்டையிடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார வைக்கப்படுகிறார்கள்.

ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கிறார்கள் ஹீரோக்கள்.  போலீஸ் துரத்துகிறது. இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில் ஹீரோக்களை சிறைபிடிக்கிறார். மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோக்கள். தமிழ்ப் படத்தில் ஹீரோவை மட்டும் தனியே காரில் கொண்டு செல்கிறார் இன்ஸ்பெக்டர். கொரியனில் அந்த தீவிர ரவுடியையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்கள்.

வழியில் ஹீரோ ஓட்டுநரை மீறி வண்டியை திருப்ப அது விபத்துக்குள்ளாகிறது. கொரியனிலும் அப்படித்தான்.. தமிழில் ஹீரோ மட்டும் தப்பிக்கிறார். கொரியனில் இருவரும்..

ஹீரோகள் நேராக ஹோட்டலுக்கு சென்று தனது பாஸையும், உடன் இருப்பவர்களையும் அடித்து நொறுக்குகிறார். அடிபட்டவர்கள் போலீஸுக்கு போன் செய்து புகார் செய்கிறார்கள் கொரியனில்..

தமிழில் இங்கிருந்து கதை மாறுகிறது..  கொரியனில் வேறொரு தீவிர ரவுடியின் துணையுடன் துப்பாக்கியை பறிமுதல் செய்து கொண்டு தப்பிக்கிறார் ஹீரோ. ரவுடியின் துணையுடன் கார் சேஸிங்.. துப்பாக்கிச் சூடு.. ரவுடியின் அம்மாவை மருத்துவமனைக்கு சென்று பார்ப்பது.. இதன் பின்னர் போலீஸ் இவர்களை தேடுவது.. இது கொரியன் படம்..

தமிழ்ப் படம் ஹீரோயிஸமாக எடுத்திருப்பதால் அவரது தனி மனித ஹீரோயிஸத் தனத்தோடு சேர்த்து ஒரு கதையை உருவாக்கி அதையும் திறமையான இயக்கத்தினால் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஓகே.

ஆனால், கொரியன் திரைப்படம் தமிழைவிடவும் மிக அருமையாக இருக்கிறது..!

இதை இயக்குநரிடம் போய் கேட்டால், “இது ச்சும்மா ஒரு இன்ஸ்பிரேஷன்தான் ஸார்.. காப்பியில்லை…” என்பார்.. ‘இன்ஸ்பிரேஷன்’ என்றால் என்ன? ‘காப்பி’ என்றால் என்ன? என்பதற்கு கோடம்பாக்கத்தில் விளக்கமே சொல்ல மாட்டார்கள். அவரவர் மனதில் பட்டது எதுவோ அதுவே நியாயம் என்பார்கள்..!

இதில் இறுதியாக ‘தொடரும்’ என்று வேறு போட்டு முடித்திருக்கிறார்கள். அடுத்த பாகம் எந்தப் படத்தின் காப்பியோ..?

Our Score