“சிம்பு விவகாரத்தில் யாரும் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மறுப்பு..!

“சிம்பு விவகாரத்தில் யாரும் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மறுப்பு..!

நடிகர் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்திற்குத் தடை போட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக சில நாட்களுக்கு முன்பாக சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தரும், அவரது அம்மா உஷா ராஜேந்தரும் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாருக்கு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் பதில் அளித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தயாரிப்பாளர் சங்கத்தில் யாரும் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை. இதற்கு முன்பாக விஷால் தலைமையில் இருந்த நிர்வாகத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவித்தார்கள். வழக்கம்போல டி.ராஜேந்தர் இதை திசை திருப்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

Our Score