full screen background image

நான் அப்பாவாகப் போறேன் – நடிகரின் சந்தோஷம்..!

நான் அப்பாவாகப் போறேன் – நடிகரின் சந்தோஷம்..!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அவருடைய இருப்பிடம் மலையாள சினிமாவில் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்வதைவிடவும் மிகப் பெரிய சந்தோஷம் இந்தாண்டு அவருக்குக் கிடைக்கப் போகிறது..

தான் அப்பா ஆகப் போவதை நினைத்து அவர் பெருமையும், சந்தோஷமுமாக சொல்லியிருப்பதை பார்த்தால் இதைத்தான் சொல்ல முடிகிறது.

“இந்தச் செய்தி மிக மிக முக்கியமான பெர்ஸனல் மற்றும் சிறப்புச் செய்தி.. நீங்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள் என்றே நா்னும் நினைக்கிறேன்.. நான் அப்பாவாகப் போகிறேன்.. சுப்ரியாவும் நானும் இத்தருணத்தை மிக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறோம்.. என் வாழ்க்கையில் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நான் தயாராகியிருக்கிறேன்.. என்னுடைய மிகச் சிறந்த படைப்பின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்..!”  என்று குறிப்பிட்டிருக்கிறார்..!

பிபிசியில் செய்தியாளராகப் பணியாற்றிய சுப்ரியா, ஒரு பேட்டிக்காக பிருத்விராஜை சந்திக்க வந்து இருவருக்கும் இடையில் காதல் அரும்பி 2011-ல் திருமணம் நடந்தது.. 3 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்கப் போவதால் எல்லா தகப்பன்களை போலவும் பிருத்விராஜும் உச்சக்கட்ட சந்தோஷத்தில்தான் இருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் நடிகர் பிருத்விராஜின் இந்தச் சந்தோஷ செய்திக்கு இதுவரையிலும் 1,04,210 பேர் வாழ்த்துச் சொல்லியிருப்பதும், 5,088 இச்செய்தியை தங்களுடைய பக்கத்தில் ஷேர் செய்திருப்பதும்தான்..!

Our Score