full screen background image

நவீனமயமாக்கப்பட்ட பிரசாத் லேப் தியேட்டர்…! 

நவீனமயமாக்கப்பட்ட பிரசாத் லேப் தியேட்டர்…! 

தமிழ்த் திரையுலகில் பழம் பெருமைமிக்க ‘பிரசாத் லேப்’ நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது ‘பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்’. 128 இருக்கைகள் மட்டுமே இருந்த ப்ரிவியூ தியேட்டர் தற்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தியேட்டர் மேலாளரான கல்யாணம் கூறுகையில், “தியேட்டரில் இருந்த பழைய இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் சினிமா தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.

kalyanam

முன்பைவிடவும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணமும் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. இப்போது பிரசாத் லேப் தியேட்டரில் கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் அமர முடியும். 

திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்து பரவச நிலை அடையும் வண்ணம் பழைய ஸ்கீரின் அகற்றப்பட்டு,  பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

img_1895

ஒலி, ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45 லட்சம் ரூபாய் செலவில் 4-K தொழில் நுட்பம் வெளிநாட்டிலிருநஅது இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த வசதியுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.

அது மட்டுமல்ல, கூடுதலாக பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம். அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்.எம். திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர்வரை அமர்ந்து படம் பார்க்கலாம். 

வி.ஐ.பி.கள் – செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது. அருகில் உள்ள அழகிய புல்வெளியில் வீடியோ பைட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். 

இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 

250 இரு சக்கர வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் ‘பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்’ மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள்..” என்று சந்தோஷமாக கூறினார்.

Our Score