“டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன்” – பிரகாஷ்ராஜின் பெருமிதம் !

“டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன்” – பிரகாஷ்ராஜின் பெருமிதம் !

க்ரீன் சிக்னல்  கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழகத்தின் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். 

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன்  ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியோரும் நடிக்கின்றனர். 

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவ தோற்றத்தில் பங்கு பெறுகிறார்கள். இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப்  பெரும் விருந்தாக இருக்கும்.

இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக  நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி பிரகாஷ்ராஜ்  கூறும்போது "வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்..." என்றார்.

"படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும்.." என்கிறார் இயக்குநர் விஜய் விக்ரம்.

இப்படத்தின்  ஒளிப்பதிவை குகன். S.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ‘ஹரஹர மகாதேவகி’ புகழ் பாலமுரளி பாலுவும், படத் தொகுப்பினை பிரபாகரும், கலையை வனராஜும் மேற்கொள்கிறார்கள்.