நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டுவரும் பிரபுதேவா புதிதாக தயாரிப்பாளராகவும் உருவெடுக்க முடிவெடுத்துள்ளார்.
தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார். நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும், பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய முதல் அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவிக்க உள்ளனர்.
“சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ்த் திரையுலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக் கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ செயல்படும்..” என்கிறார் பன்முகம் கொண்ட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பிரபுதேவா.