full screen background image

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..!

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம்..!

ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார்.

மேலும் ஜான் விஜய், வி.டி.வி.கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அறிமுக இயக்குநரான சாம் ரோட்ரிக்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் பற்றி இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில், ”பிரபு தேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக இது தயாராகிறது.  இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களுக்கு புதுமையான ஒரு அனுபவமாக இருக்கும்…” என்றார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நாயகன் பிரபுதேவா, தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
Our Score