‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘தேவராட்டம்’, ‘திரவுபதி’, ‘மண்டேலா’, ‘ரத்த சாட்சி’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆறு பாலா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘போர்குடி’.
இப்படத்தை ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷனின் சரவணன் குப்புசாமி மற்றும் யாதவ் ஃபிலிம் புரொடக்ஷனின் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில், ஆர்.எஸ்.கார்த்திக், புதுமுகம் ஆராத்யா ஜோடியாக நடித்துள்ளனர்.
செந்தமிழ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் (விருமன், தேவராட்டம் புகழ்) படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஓம் பிரகாஷ் ஸ்டண்ட் வேலைகளையும், முகமது அர்சத் வடிவமைப்பு வேலைகளையும் கையாள்கின்றனர். பிரின்ஸ் பிரேம் (மேக்கப்), அகிலன் ராம் (காஸ்ட்யூம் டிசைனர்), வினோத்குமார்.சி (பிசினஸ் ஹெட்), ஏ.வினோத், சோழகர், ஏ.விக்னேஷ், அன்பழகன், வேந்தர் (நிர்வாகத் தயாரிப்பாளர்கள்), சுரேஷ் சந்திரா (பத்திரிகை தொடர்பு) ஆகியோர் இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள்.
இந்தப் ‘போர்குடி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரில் உள்ள எமோஷன், ஆக்ஷன் மற்றும் காதல் ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து மற்றொரு கனமான கதையாக பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது என்பதை தெளிவாக நிறுவுகிறது.
படம் பற்றி இயக்குநர் ஆறு பாலா பேசும்போது, “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறுதலாக, பழி வாங்கலுக்காக சிலர் பயன்படுத்துவதைப் பற்றிய படம் இது. தென் தமிழகத்தில் நடக்கும் கதையாக இது உருவாகி இருக்கிறது. மனித நேயம் பற்றிய செய்தியை படம் பேசும். கதை யாரையும் புண்படுத்தாது. அனைத்து வித ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் உருவாக்கியுள்ளோம்…” என்றார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை வில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர் பாக்ஸ் கம்பெனி உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.