‘சுப்பிரமணியபுரம்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அமரகாவியம்’ வரிசையில் 1980-களை கதையின் காலமாக வைத்து எடுக்கப்படும் அடுத்த படம்தான் இந்த ‘போர்க்குதிரை’..!
1980-ல் உசிலம்பட்டியில் நடக்கும் கதைதான் இந்தப் படத்தின் களம். ஒரு அப்பாவி இளைஞனுக்கும் அராஜகக்காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே இந்த ‘போர்க்குதிரை’.
1980-ல் காதல் எந்தளவுக்கு உன்னதமாக இருந்தது..? மற்றும் குடும்பங்களில் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா பாசம், எந்தளவுக்கு இணக்கமாக இருந்தது என்பது பற்றியுமான கதை இது. நாம் சில சமயங்களில் ஏதாவது ஒரு ஊருக்கு செல்லும்போது அங்கு நமக்கு நல்ல அனுபவமோ, கெட்ட அனுபவமோ கிடைக்கக் கூடும்..
அது போல கதாநாயகன் காளி உசிலம்பட்டிக்கு செல்லும்போது அவன் அதுவரையில் சந்தித்திராத ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கிறது..! அதை அவன் எவ்வாறு போர்க்குணம் கொண்டு சந்திக்கிறான் என்பதை ஓர் அழகான காதல், நட்பு, குடும்ப பாசம், யதார்த்தமான, வியக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் கலந்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்ணின் மனமும் கலாச்சாரத்தின் பின்னணியிலும், மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் உடைகள், இடங்கள், பொருட்கள், பாடல்கள், காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை 1980-க்கே கொண்டு செல்லும். அதற்காக இயக்குநர் ஸ்ரீபிரவின் மற்றும் படக் குழுவினர் மிகவும் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.
நடிகர்கள் :
சைத்தன்ய கிருஷ்ணன் (கதாநாயகன்)
சாந்தினி தமிழரசன் (கதாநாயகி)
நாகி நீடு (முக்கிய கதாபாத்திரம்)
கவிதா ஸ்ரீநிவாசன் (முக்கிய கதாபாத்திரம்)
பங்கஜ் (வில்லன்)
சஞ்சய் (வில்லன்)
தொழில் நுட்ப கலைஞர்கள் :
இசையமைப்பாளர்கள் : பரத் வி.எம். – நந்தன்
பாடலாசிரியர்கள் : தாமரை, விவேகா, கே.என்.விஜயகுமார், பாரதி ஷர்மா
ஒளிப்பதிவு : விஸ்வா
படத்தொகுப்பு : பிரவின் P
ஒலி வடிவமைப்பு : கிருஷ்ண ராஜ்
நிழற்படம் : ஸ்ரீதர்
சண்டை பயிற்சி : வெங்கட்
மக்கள் தொடர்பு : நிகில்
வசனம் – இணை இயக்கம் : எஸ். கல்யாண ரமேஷ்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரீநிவாஷ்
தயாரிப்பாளர் : ஸ்ரீபிரவீன் குமார் ரெட்டி
கதை, திரைக்கதை, இயக்கம் : ஸ்ரீபிரவீன்