full screen background image

‘பொறியாளனு’ம், ‘வேலையில்லா பட்டதாரி’யும் வேறு வேறு கதையாம்..!

‘பொறியாளனு’ம், ‘வேலையில்லா பட்டதாரி’யும் வேறு வேறு கதையாம்..!

இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளரான மணிமாறன் ‘என்.ஹெச்.47’ படத்தை இயக்கியவர். இவருடைய கதை, திரைக்கதை, வசனத்தில் ‘பொறியாளன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இவருடைய நண்பர் தாணுகுமார்.

இயக்குநர்கள் எப்போதுமே தாங்களே கதை, திரைக்கதை, வசனம் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த நிலைமையில் மற்றவரின் எழுத்துக்கு இயக்கம் மட்டுமே செய்ய முன் வந்த இந்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்..

படத்தின் டிரெயிலர் ஒளிபரப்பப்பட்டது. முற்றிலும் ஒரு கட்டுமான நிறுவனத்தில்.. கட்டிடம் கட்டும் இடத்திலேயே கதை நகர்வது போல தெரிந்தது.. இந்தப் படத்தின் ஒளிப்பதிவார் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இயக்குநர் என்பதும் கூடுதல் தகவல்.

போதாதா என்ன..? பிரஸ்மீட்டில் இது தொடர்பாகவே கேள்விகள் பறந்தன..

Poriyaalan Press Meet Stills (1)

இதற்கு பதில் சொன்ன வேல்ராஜ், “இந்தப் படம் நான் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பண்றதுக்கு முன்னாடியே ஒத்துக்கிட்ட படம்.. ஆனா ‘வேலையில்லா பட்டதாரி’ பண்ணிக்கிட்டிருக்கும்போது இந்தப் படத்துலேயும் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது.. அப்பவே யோசிச்சேன்.. ‘என்னடா பேஸ்மெண்ட் நம்ம படம் மாதிரியிருக்கே’ன்னு.. அப்புறம் இயக்குநரும், கதாசிரியரும் முழு கதையையும் சொன்னாங்க.. அப்பாடான்னு இருந்தது.. இது நிச்சயம் ‘வேலையில்லா பட்டதாரி’ கதையில்லை.. அப்படியே வேற ஒரு பேட்டர்ன். படம் பார்க்கும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..” என்றார்.

படத்தின் இயக்குநர் தாணுகுமாரும் இதையேதான் சொன்னார். “இது வேலையில்லா பட்டதாரி படத்துக்கு முன்பாகவே இந்தக் கதையை ரெடி பண்ணிட்டோம்.. அது வேற இது வேற..” என்று நம் சந்தேகத்தைத்  தீர்த்து வைத்தார்.

இந்தப் படத்தில் ‘சிந்துசமவெளி’ படத்தில் ஹீரோவாக நடித்த ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ரக்சிதா என்ற புதுமுகம் நடிக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்தே இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு துணையாக இருந்த இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை வாங்கிக் கொண்டாராம்.. ஆனாலும் படத்தை வெளியிடும் உரிமையை இப்போது கடைசி நேரத்தில் வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது..

இப்போ இந்த ‘பொறியாளன்’ சுலபமா தியேட்டருக்கு வந்திருவார்..

Our Score