‘சித்து பிளஸ் 2’, ‘நான் ராஜாவாக போகிறேன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சாந்தினி மீண்டும் கதாநாயகியாக பிரவேசம் செய்யும் படம் ‘போர் குதிரை’.
அறிமுக இயக்குனர் சாய் பிரவீன் இயக்கும் இந்த ‘போர் குதிரை’ திரைப்படம் 80-களில் உள்ள காதலையும், உணர்வையும் படம் பிடித்துக் காட்டும் படமாம்.
படம் பற்றி பேசிய இயக்குநர் சாய் பிரவீன், “இந்த மண்ணின் மணத்தையும், குணத்தையும் எதிரொலிக்கும் படம்தான் இந்த ‘போர் குதிரை’ உசிலம்பட்டியை ஒட்டிய பகுதிகளில் பெருமளவுக்கு படமாக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் ஜீவ நாடியே படத்தின் நாயகிதான். சாந்தினி, தனது உன்னத நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் தந்திருக்கிறார். தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் அவர் உச்சரித்தது ஒரு இயக்குனராக என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஒரு காட்சி படமாக்கப்படும்போது மற்றவர்களுக்கு சரி என்று பட்டாலும் ‘இன்னமும் நல்லா பண்ணி இருக்கலாம்ல்ல.. சார்…’ என்று கேட்பதே அவர் இன்னமும் உயர்ந்த நிலைக்கு வருவார் என்பதற்கு சான்று. ‘போர் குதிரை’ படத்தில் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்” என்கிறார் இயக்குனர் சாய் பிரவீன்.