1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’

1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்ய பிரமீளா தயாரிக்கும் திரைப்படம் ‘பூவே போகாதே.’

இந்தப் படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா, இசை - சபு வர்கீஸ், பாடல்கள் -  விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர், படத் தொகுப்பு - ஜே.பி., நடன இயக்கம் - நரேஷ் ஆனந்த், சண்டை இயக்கம் - ராம் சுங்கரா, நபா சுப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.

படம் பற்றி இயக்குநர் நவீன் நயனி பேசும்போது, "1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது.  முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது.

அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்..? அந்தக் காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக இந்தப் படத்தில் பதிவிட்டுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்.." என்றார் இயக்குநர் நவீன் நயனி.