நடிகை அஞ்சலியின் பேய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூச்சாண்டி’..!

நடிகை அஞ்சலியின் பேய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூச்சாண்டி’..!

படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி.

அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள பூச்சாண்டி’ திரைப்படமும், அவரது புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாகத் திகழும் என உறுதியாக தெரிகிறது.

The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.S.சினீஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஞ்சலி, யோகிபாபு, விஜய் டிவி ராமர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கிருஷ்ணன் ஜெயராஜ், இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – ஆர்வி & மருதநாயகம், கலை இயக்கம் – சக்தி வெங்கட் ராஜ், பாடல்கள் – கு. கார்த்திக், காதல் வேந்தன், நடன இயக்கம் – ஷெரீஃப், நந்தா, சண்டை இயக்கம் – சில்வா, உடைகள் – சண்முகப்பிரியா தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – T. முருகேஷன், ஒலிக் கலவை – M.சரத்குமார், விஷுவல் எபெக்ட்ஸ் – DTM லவன் & குசன், ஒப்பனை – ராஜு, புகைப்படங்கள் – ராஜா,  விளம்பர வடிவமைப்பு – N.T.ப்ரதூல், இணை தயாரிப்பு – T.ஏழுமலையான்.

அறிமுக இயக்குநரான கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி, இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் பேசும்போது, “இந்தப் பூச்சாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு,  மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது.

த்திரைப்படம் முழுக்க, முழுக்க குழந்தைகளை மையமாக கொண்டு,  வேடிக்கைகள் நிறைந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால்,  படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஞ்சலி கண்டிப்பாக குழந்தைகள் விரும்பும் நாயகியாக மாறிவிடுவார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள். 

மேலும் விஜய் டிவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். படத்தின்  95 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் படமாக்கப்படும். டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்…” என்றார்.

நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாக குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.

Our Score