‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்..!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்..!

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் ஸ்டூடியோவில் போடப்பட்டிருக்கும் செட்டுக்களில் தற்போது முழு வீச்சில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், திரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் த்ரிஷா தனியாக குதிரையேற்றப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு இந்த வாரம் களம் புகுந்திருக்கிறாராம்.

முன்பு திட்டமிட்ட ஷெட்யூலின்படி ஜனவரி கடைசிவரையிலும் ஷூட்டிங் நடைபெற்று பிப்ரவரி மாதம் விடுமுறை விடப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் இந்த ஷூட்டிங் துவங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது விடுமுறை விடும் திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம் இயக்குநர் மணிரத்னம். சூட்டோடு சூட்டாக பிப்ரவரி கடைசிவரையிலும் படப்பிடிப்பை நடத்தி, ஒட்டு மொத்தமாய் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதற்கு கொரோனாவின் புதிய அலை ஒரு காரணமாய் சொல்லப்பட்டாலும் நடிகர்கள் இந்த ஒரு படத்திற்காகவே தங்களது தோற்றத்தை மாற்ற வைத்திருப்பதும், தாடி வளர்த்திருப்பதும் மேலும், மேலும் அவர்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதால் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட முடிவு செய்துவிட்டாராம் இயக்குநர் மணிரத்னம்.

இதன் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள், மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடிய வாய்ப்புள்ளது.

Our Score