நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுத்த காவல்துறை

நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுத்த காவல்துறை

வரும் 23-ஆம் தேதியன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான அனுமதியும் கல்லூரித் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள், அவா்களுடைய வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்த இருப்பதைக் கண்டித்து சென்னைப் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரை பரீசிலித்த காவல்துறை, சில பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து 23-ஆம் தேதியன்று டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடிகா் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு சுமார் 8,000-க்கும் அதிகமான ரசிகர்கள் கல்லூரி வளாகத்தில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாலும், ஏற்கனவே துா்காபாய் தேஷ்முக் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாலும் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகா் சங்கத் தோ்தலை நடத்துவதற்கு காவல்துறை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

மேலும் கல்லூரிக்கு அருகில் தமிழக முதல்வா் உட்பட அமைச்சர்களின் வீடுகள், முக்கிய மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் இருப்பதாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடிகா் சங்கத் தோ்தல் நடத்துவதற்கான அனுமதியைக் காவல்துறை மறுத்துள்ளது.

Our Score