full screen background image

புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகியிருக்கும் ‘பிறர் தர வாரா’

புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகியிருக்கும் ‘பிறர் தர வாரா’

ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.காமராஜ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பிறர் தர வாரா.’

இந்தப் படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ்,  சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டேவிட் – கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரி பிரசாத் படத் தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.காமராஜூம் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததோடு இல்லாமல் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நகரத்தில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்..? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்..? என்பதை கண்டறிய சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கிறார் நகர போலீஸ் கமிஷனர். அந்த அதிகாரியும் வழக்கில் துப்பு துலக்குகிறார்.

ஆனால் விசாரணையின் முடிவில் இதன் பின்னால் இருப்பவர் யார் என்பதை அறிந்ததும் அந்த அதிகாரி பெரும் அதிர்ச்சி அடைகிறார். யார் அவர்..? எதற்காக இதில் ஈடுபட்டார் என்பதை கேட்டதும் அவருக்கு கூடுதல் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

இப்படி விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு… திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எழுதி நறுக்கான வசனம் தீட்டி தனது சார்பில் தானே தயாரித்து படத்தில் சிறப்பு அதிகாரி வேடமும் ஏற்று படத்தை அருமையாக இயக்கியும் உள்ளார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.காமராஜ்.

கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Our Score