full screen background image

திருட்டு டிவிடி கும்பலை பிடித்துக் கொடுத்த நடிகர் சங்கத்தினர்..!

திருட்டு டிவிடி கும்பலை பிடித்துக் கொடுத்த நடிகர் சங்கத்தினர்..!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த்லால் சேட்டு என்பவரின் குடோனில் திருட்டு டிவிக்கள் தயாரிக்கப்படுவதாக நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான ரமணா மற்றும் நந்தாவுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக இது பற்றி  நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷாலுக்கு தகவல் கொடுத்து அவருடைய அறிவுரையின்பேரில் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

சேலம் மாவட்ட திருட்டு டிவிடி தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளரான ஜெயலக்ஷ்மியின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான  நீதி ராஜனின் முன்னிலையில் அந்தக் குடோனில் சோதனை நடத்தப்பட்டது.

IMG_3097

அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தக் குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே இருந்து தர்மபுரி, சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட  பத்து மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இன்னொரு இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

IMG_3092

இதேபோல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில்  சோதனையிட்டபோது அங்கேயிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள குறும்தகுடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக திருட்டு டிவிடிக்களை கண்டுபிடிக்கும் பணியில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களே களமிறங்கியிருப்பதால், திருட்டு டிவிடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளன.

Our Score