“பிச்சைக்காரன்’ நிச்சயம் லாபம் ஈட்டுவான்..” – விநியோகஸ்தரின் அதீத நம்பிக்கை..!

“பிச்சைக்காரன்’ நிச்சயம் லாபம் ஈட்டுவான்..” – விநியோகஸ்தரின் அதீத நம்பிக்கை..!

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'பிச்சைக்காரன்' படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் என திரையுலகில் நல்லதொரு பேச்சும்  நிலவி வருகிறது.

கடும் போட்டியிருந்த சூழலில் 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையை பல்வேறு  படங்களை வாங்கி விநியோகித்திருக்கும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தினர் கைப்பற்றியுள்ளனர். 

படத்தை வாங்கிய பெருமிதத்துடன் பேசிய கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சரவணன்  இது பற்றி பேசும்போது, அடிப்படையில் ஒரு விநியோகஸ்தராக கடந்த சில ஆண்டுகளாக விஜய் அண்டனியின் வளர்ச்சியை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன்.

அவரது கதை தேர்வு, தன்னுடைய பலம் அறிந்து செயல்படும்திறன், திறமையான இயக்குனர்களுடன் பயணிப்பது என்று திட்டமிட்டு செயல்படுகிறார். இந்த திட்டமிடுதலும், சீரிய முயற்சியும் அவரது தொடர் வெற்றிக்கு மூலக் காரணங்களாகும்.

'பிச்சைக்காரன்' படத்தில் அவர் இயக்குநர் சசியுடன் பயணித்து இருப்பது அவரை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டு செல்லும். இந்தக் கூட்டணி ரசிகர்களின் ரசனைக்கேற்ற படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வர்த்தக ரீதியாகவும் 'பிச்சைக்காரன்' மிக பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

'பிச்சைகாரன்' படத்தின் பாடல்கள் படத்துக்கு மிக பெரிய பலம் எனலாம். வருகின்ற 7-ம் தேதி 'பிச்சைக்காரன்' படத்தின் இசை வெளியாகவுள்ளது.

இந்த ஜனவரி இறுதியில்  வெளிவரவிருக்கும் இந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் எல்லோருக்கும் லாபம் ஈட்டி தரும் படமாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார் தன்னம்பிக்கையோடு.