தற்போது தமிழக அரசியலில் புயலாய் சீறிக் கொண்டிருக்கும் விஷயம், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருக்கும் 11 சினிமா தியேட்டர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது அண்ணியான இளவரசிக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது என்பதுதான்.
கடந்த 7 நாட்களாக பல்வேறு யூகங்களையும், எதிர்பார்ப்புகளையும், விவாத மேடைகளையும் பார்த்துவிட்ட இந்த தியேட்டர் அபகரிப்பு விஷயத்திற்கு இன்றைக்கு எதிர்த் தரப்பினர் பதில் கூறியுள்ளனர்.
அந்தத் தியேட்டர்கள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு 2020-ம் வருடம் வரையிலும் குத்தகைக்கு்தான் தரப்பட்டுள்ளது என்றும் விலைக்கு விற்கப்படவில்லை என்றும் அந்த பீனிக்ஸ் மாலின் உரிமையாள நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் கூறியுள்ளது.
அந்த அறிக்கை இங்கே :