பில்லி, சூனியம் பற்றிப் பேச வரும் ‘பேச்சி’ திரைப்படம்..!  

பில்லி, சூனியம் பற்றிப் பேச வரும் ‘பேச்சி’ திரைப்படம்..!  

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆர்.பரந்தாமன், விக்னேஷ் செல்வராஜன், விஜய் கந்தசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பேச்சி’.

இத்திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘பேச்சி’ என்கிற பெயரிலேயே குறும்படமாக வெளிவந்திருந்தது. குறும்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ராமச்சந்திரனே இத்திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – பார்த்திபன், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், படத் தொகுப்பு – இக்னேஷியஸ் அஸ்வின்.

குறும்படமாக எடுக்கப்பட்டிருந்தபோது அதைப் பார்த்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா படத்தை ரசித்துப் பார்த்ததுடன் படத்தின் இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இத்திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான ஒரு படைப்பாக இருக்கும். பில்லி, சூனியம் ஆகிய மந்திர மாயங்களை மையக் கருவாகக் கொண்டது இப்படம். இப்படத்துக்காக இயக்குநர் ராமச்சந்திரன் பில்லி, சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இத்திரைப்படம் வேறுபட்ட படைப்பாக இருக்கும். “இது ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார்…” இயக்குநர் ராமச்சந்திரன்.

இப்படம் அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாகவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக படமாக்கவுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் first look Poster-ஐ நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். போஸ்டர் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Our Score