நூதன திருட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘பற்ற வைத்த நெருப்பொன்று’

நூதன திருட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘பற்ற வைத்த நெருப்பொன்று’

இருவர் பிலிம் பேக்டரி என்ற  புதிய பட  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன் இயக்கி,  தயாரித்திருக்கும் படம் ‘பற்ற வைத்த நெருப்பொன்று.’

இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் புதுமுகம் தினேஷ். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது ‘தடம்’ திரைப்படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஸ்மிருதி நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுகங்கள் அபிலாஷ், மாரிஸ், ஹரி, ரஞ்சித், திரு ஆகியோரும் நடித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொழில் நுட்ப வளர்ச்சியினால்  மக்களுக்கு எந்தளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்  நூதன சைபர் திருட்டு,  டெலிவரி நெட்வொர்க் மூலம் நடக்கும் தீமைகளையும், சமூக விரோத செயல்கள் என பல தற்கால சமூக பிரச்சனைகளைப்  ஆணித்தரமாக இந்த படத்தின் மூலம் விளக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வினோத் ராஜேந்திரன்.

இதன் படப்பிடிப்பு கிழக்குக் கடற்கரை சாலையில் 30 நாட்களும், சண்டை காட்சிகள் பழவேற்காடில்10 நாட்களும், சென்னையை  சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களும் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தில் பணியாற்றியுள்ள நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும்  கிட்டத்தட்ட இத்திரைப்படத்தின் மூலமே  அறிமுகம் ஆகிறார்கள்.

சூர்ய பிரசாத்தின் இசையில் இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள்  அமைந்துள்ள  இந்த படத்திற்கு  சுரேஷ் ஜோ ஒளிப்பதிவாளராகவும்,  தீபக் துவாரகநாத் எடிட்டராகவும் பணிபுரிந்து உள்ளனர்.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டீஸரை  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட ஏராளமான திரை நட்சத்திரங்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

படத்தின் ஆடியோ உரிமத்தை டிவோ மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.  வெளியான சில மணி நேரத்திலேயே நல்ல வரவேற்பை  இப்படத்தின் டீஸர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score