‘பட்ற’ திரைப்படத்தின் முன்னோட்டம்

‘பட்ற’ திரைப்படத்தின் முன்னோட்டம்

என்னடா இன்னும் இந்த சுத்தமான தமிழ்ப் பெயரில் ஒரு படம்கூட வரலியேன்னு நினைச்சோம். வந்திருச்சு..!

‘பட்ற’ என்ற தலைப்பில் ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்திகுமார் தயாரிக்கும் புதிய படம் , நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை.

Poster 1

மனித உருவில் வலம் வரும் மிருகங்கள் இடையே வாழும் ஒரு இளைஞன் விண்வெளி துறையில் சாதிக்க விரும்புகிறான். அவனது வானுயர்ந்த எண்ணங்கள் அவனது வாழ்வில் சந்திக்கும் சில சம்பவங்களால் கீழே விழுந்து நொறுங்கி போகிறது. தவிர்க்க முடியாத அவன் விரும்பாத ஒரு சூழ்நிலை அவனது வாழ்கையைே புரட்டி போடுகிறது. சமூகத்தின் இரு பெரிய தூண்கள் இடையே அவன் ஒரு துரும்பாக நுழைந்து, ஆயுத கிடங்காக மாறி எப்படி அழிக்கிறான் என்பதே இந்த ‘பட்ற’ படத்தின் கதை அம்சம்.

சமூகத்தின் அவலமான இரு பெரிய துருவங்களின் போர் எப்படி அப்பாவி மக்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அறிமுக இயக்குனர் ஜெயந்தன் மிகவும் நேர்த்தியாக, துணிச்சலாக இந்தப் படத்தில் படம் பிடித்து காட்டி உள்ளார்.

இதில் மிதுன் தேவ் ஹீரோவாகவும், வைதேகி ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். மற்றும் சாம் பால், ரேணிகுண்டா கணேஷ். புலிபாண்டி, ஆதேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். சாமி, லோகு இருவரும் கலைத்துறையை கவனித்திருக்கின்றனர். மிரட்டல் செல்வம் தனது சண்டை காட்சிகளால் மிரட்டியிருக்கிறார். யுகபாரதி, கெளதம் எழுதிய பாடல்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ஷங்கர் மகாதேவன், ஹரிச்சரண், முகேஷ், மாளவிகா, நிவாஸ், ரீட்டா, மான்ஸி, கிருஷ்ணா, சந்தோஷ், பிக்னிக் ஆகியோர் பாடியிருக்கின்றனர். எழுதி, இயக்கியிருக்கிறார் ஜெயந்தன்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..

Our Score