பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!
இந்தப் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – ஜிஜு சன்னி, படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், நிர்வாகத் தயாரிப்பு – டி.முருகேசன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு, உடைகள் – ஷேர் அலி, நடன இயக்கம் – அப்சர், பாடல்கள் – யுகபாரதி,
‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபீஸ் கதாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய இந்த ‘பார்க்கிங்’ படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக் குழு முடித்துள்ளது.
இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்களான பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தினர், இப்படம் வரும் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.










