சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.’ திரைப்படம்

சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.’ திரைப்படம்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.’.

இந்தப் படத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

சமீபத்தில் ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.’ திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு ‘U’ சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் கதைக் களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குநர் மாரி செல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொல்லிய அதிகாரிகள், வேறெந்த இடத்திலும் கட் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இப்படம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்” என்று சொன்னதோடு, “இது போன்ற கதையுடன் கூடிய கமர்சியல் திரைப்படங்களில் சின்ன சின்ன இடங்களில் கட் சொன்னால் அதன் உண்மைத் தன்மை குலைந்துவிடும். நல்ல சினிமாவை எடுத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்...” என்று பாராட்டியிருக்கிறார்கள்.