full screen background image

காதலின் அழகிய தருணங்களை பேசும் ‘பரிவர்த்தனை’ திரைப்படம்!

காதலின் அழகிய தருணங்களை பேசும் ‘பரிவர்த்தனை’ திரைப்படம்!

M.S.V. Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’.

காதலும், காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் நாயகன், நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன் திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோகுல், இசை – ரஷாந்த் அர்வின், படத் தொகுப்பு – ரோலக்ஸ், நடன இயக்கம் – தீனா, பாடல்கள் – V.J.P.ரகுபதி, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், இணை இயக்கம் – இளமாறன் வேணு. 

இப்படத்தினை ‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களின் இயக்குநரான எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குனர் மணிபாரதி பேசும்போது. “காதல் எப்போது வரும்.. எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை. அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டவர்களின் மனப் பிரவாகம்தான் இந்தப் ‘பரிவர்த்தனை’ படம். 

நம் வாழ்வின் ஆகச் சிறந்த தருணங்கள் எதுவென்றால், அது நமது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளுடன் படமாக்கியிருக்கிறோம். 

கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்க வழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படவுலகில் காதலையும், காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம்…” என்றார்.

இப்படத்தினை மேலும் மெருகேற்றும்விதமாக இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தினை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்தின் இறுதி காட்சியை கண்டு வியந்து பாராட்டினர்.

Our Score