full screen background image

காதலுக்கு தடையாய் இருக்கும் மதங்களைப் பற்றிப் பேச வரும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம்!

காதலுக்கு தடையாய் இருக்கும் மதங்களைப் பற்றிப் பேச வரும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம்!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் புதிய திரைப்படம் ‘பரமசிவன் பாத்திமா’. 

இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்குகிறார்.

புரொடக்ஷன் நம்பர் 7-ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும், கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன‌ என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கிறது.

இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

படம் குறித்த இதர தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெகு விரைவில் வெளியிடப்படும்.

Our Score