full screen background image

“நிச்சயமாக தேசிய விருதினைப் பெறுவோம்…” – ‘பள்ளிப் பருவத்திலே’ இயக்குநரின் நம்பிக்கை..!

“நிச்சயமாக தேசிய விருதினைப் பெறுவோம்…” – ‘பள்ளிப் பருவத்திலே’ இயக்குநரின் நம்பிக்கை..!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக  தயாரிப்பாளர் D.வேலு தயாரித்துள்ள திரைப்படம் ‘பள்ளிப் பருவத்திலே.’ 

இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம்  நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.   நாயகியாக வெண்பா அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,  நடிகை ஊர்வசி இருவரும் நடித்துள்ளனர். மற்றும், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். மற்றும் பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ்,  பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ‘பருத்தி வீரன்’ சுஜாதா,  வேல்முருகன்,  பூவிதா, E.ராம்தாஸ், புவனா,  வைஷாலி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வினோத்குமார், இசை – விஜய் நாராயணன், பாடல்கள்   – வைரமுத்து,  வாசு கோகிலா, எம்.ஜி.சாரதா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடனம் – தினா, சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு மேற்பார்வை – எம்.ராஜா, தயாரிப்பு – டி.வேலு, எழுத்து, இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர்.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

அப்போது இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் பேசும்போது, “நம்முடைய சின்ன வயதில் இருந்தே நமக்குச் சொல்லித் தரப்படும் ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம்.

அப்படிப்பட்ட மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைத்தான்  சொல்லிருக்காங்க. அதற்கும் அடுத்துதான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க. மாணவ, மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன்தான் அதிக நேரம் இருந்திருக்கின்றோம்.

அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்ட கதைக் கருவை கொண்ட படம்தான்  இந்த ‘பள்ளிப் பருவத்திலே’.

ஒரு ஆசிரியரால்தான் ஒரு மாணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளேன். இத்திரைப்படம் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம். ஆசிரியர்களுக்கு மணி மகுடமாகவும் அமையும்.

கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவை செய்வதை பற்றி ‘தர்மதுரை’ படத்தின் மூலம் கூறியதன் மூலம் அத்திரைப்படம் தேசிய விருதினை பெற்றதைபோல், இத்திரைப்படமும் ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறியிருப்பதால், நிச்சயமாக தேசிய விருதினை பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்.

Our Score