full screen background image

காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12-ம் தேதி ‘பழகிய நாட்கள்’ திரைப்படம் வெளியாகிறது..!

காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12-ம் தேதி ‘பழகிய நாட்கள்’ திரைப்படம் வெளியாகிறது..!

சிறிய பட்ஜெட் படங்களில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த வகையில் தற்போது காதலை மையமாக வைத்து, அதே சமயம் முழுக்க, முழுக்க மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘பழகிய நாட்கள்’.

ராம்குமாரின் ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ராம்தேவ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மீரான், மேகனா, செந்தில் கணேஷ், ஸ்ரீநாத், வின்சன்ட் ராய், நெல்லை சிவா, சிவக்குமார் மற்றும் சுஜாதா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் இத்திரைப்படம் காதலர்  தின  பரிசாக வரும் பிப்ரவரி 12-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்ய,  பிற்பகுதி காதல் காட்சிகளை பிலிப் விஜயகுமார் தனது கேமிராவினால் பதிவு  செய்துள்ளார்.

இயக்குநர் ராம் தேவும், பாடலாசிரியர் கபிலனும்  இணைந்து பாடல்களை  எழுதியுள்ளனர்.

ஜான்.A., அலெக்சிஸ் ஷேக் மீரா மற்றும் மனிதன் ஆகிய  மூவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபல நாட்டுப்புறக் கலைஞரான செந்தில்  கணேஷ்  ஒரு  பாடலைப்  பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார்..!

காதலை மயமாக வைத்து தமிழில் இதுநாள்வரையிலும் பல திரைப்படங்கள்  வெளிவந்துள்ளன..! ஆனால்,  இந்தப் பழகிய நாட்கள்’ திரைப்படம்  காதலின்  பல குணாதிசயங்களையும், காதல்  வயப்படும்  ஜோடிகளின்  மனப்போக்கையும்  மாறுபட்ட  கண்ணோட்டத்தில்  சொல்கிறது..!

காதலிப்பது இரு வகைப்படும். ஒன்று – இள வயது காதல், இரண்டாம் வகை –முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல்களைப் பற்றியும் இயக்குர் ராம் தேவ் மிக யதார்த்தமாகவும், இயல்புத் தன்மை மீறாமலும்,  ஒரு  காதல்  ஜோடியை  மையமாக  திரைக்கதையில்  அமர்த்தி,  சுவைபட,  துளிகூட  விரசமின்றி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பழகிய நாட்கள்’ படம் பற்றி இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், “இந்த 2021-ம் ஆண்டின் காதலர்  தினத்தை  ஒட்டி  வெளியாகும்  இப்படம்,  இளம்  வயதினரை குறிப்பாக காதலர்களை நிச்சயமாகத்  திரையரங்குகளுக்கு  சுண்டி  இழுக்கும்..! 

அதுவும்  கல்லூரிகள்  திறக்கப்படுகிற  இந்தச்  சூழ்நிலையில்,  100 சதவிகித  இருக்கைகளுக்கும் அனுமதி  வழங்கப்பட்டுள்ள  நிலையில்,  நிச்சயமாக  இளம்  வயதினர் இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எண்ணுகிறேன்.

படத்தின் போஸ்டர்களில் நாயகனும், நாயகியும் ஒரே உடையில் தோன்றியுள்ளது  ஏற்கெனவே சோஷியல் மீடியாக்களில் பெரியதொரு  பரபரப்பை  ஏற்படுத்தியிருந்தது.

தற்சமயம் காதல் வயப்பட்டிருப்பவர்களும், காதல் வயப்படப் போகிறவர்களும்  நிச்சயமாக இப்படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்பது நம்புகிறேன். இத்திரைப்படம், வரும் பிப்ரவரி 12-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது…” என்றார்.

உண்மையான காதலர்கள் ரசிக்கும் படமாக இந்தப் பழகிய நாட்கள்’ திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score