பதுங்கி பாயணும் தல – முன்னோட்டம்

பதுங்கி பாயணும் தல – முன்னோட்டம்

அமீனா ஹூசைன் தயாரித்துள்ள புதிய படம் ‘பதுங்கி பாயணும் தல’.

‘நளனும் தமயந்தியும்’, மற்றும் ‘பர்மா’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கரும், ‘கிடாரி’யில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் எழுத்தாளர் வேல.ராம்மூர்த்தியும் இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

padhungi-paayanum-thala-stills-2

வல்லவன் இசையமைத்திருக்கிறார். மோசஸ் முத்துப்பாண்டி படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணியாற்றியவர்.

முழுக்க, முழுக்க கிராமத்து பின்னணியில் குடும்பக் கதையுடன் நகைச்சுவை கலந்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 2017 ஜனவரியில் படம் வெளியாகவுள்ளது. 

Our Score