ஸ்ரீஅய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநிவேலன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பண்ணாடி’.
இந்தப் படத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும், எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தியும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள், புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை தமிழ்த் திரை காணாத யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகிறது.
இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத் தொகுப்பு – பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் – வி.ராமச்சந்திரன், எஸ்.கோவிந்தராஜ், அனிமேஷன் – வினோத்குமார், டிசைன்ஸ் – சி.ஐ.சுரேஷ், இணை தயாரிப்பு – க.ரமேஷ் பிரியா கணேசன், ஆர்.சிவனேசன், மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.
கதை திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி படத்தையும் இயக்கியிருக்கிறார் தெ.ரா.பழநி வேலன். இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.
இந்தப் ‘பண்ணாடி’ திரைப்படம் நம்மை யார் என்று, நமக்கே சொல்ல வரும் ஒரு புதுமையான கதைக் களன் கொண்டது. முழுக்க, முழுக்க கிராமத்துப் பின்புலத்தில் இந்தப் படம் உருவாகிறது.
‘பண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.