‘பாயும் புலி’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கலை இயக்கம் – ராஜீவன். எடிட்டிங் – ஆண்டனி. நடனம் – ஷோபி, சண்டை பயிற்சி – அனல் அரசு.
இந்தப் படத்தை வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. ஒரு கட் கூட சொல்லப்படாமல் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். சுசீந்திரனுடன் விஷால் இணையும் இரண்டாவது படம் இது. முந்தைய ‘பாண்டிய நாடு’ போலவே இந்தப் படமும் வெற்றி பெறும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகத்தில் நிலவுகிறது.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.









