“சிவக்குமார் பெயரை கெடுத்திருவார் போலிருக்கு..!” சூர்யா பற்றி பார்த்திபனின் கிண்டல்..!

“சிவக்குமார் பெயரை கெடுத்திருவார் போலிருக்கு..!” சூர்யா பற்றி பார்த்திபனின் கிண்டல்..!

சத்யம் தியேட்டரில் நடந்த அஞ்சான் திரைப்பட விழாவில் பேச வந்த பார்த்திபனின் பேச்சு வழக்கம் போலவேதான் இருந்தது. சூர்யாவை பாராட்டி அவர் பேசிய பேச்சைக் கேட்டு சூர்யாவே சற்று சங்கடத்தில் நெளிந்தார்..!

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :

“பொதுவா பர்த்டே அன்னைக்கு கேக் வாங்கலாம், பொக்கே கொடுக்கலாம், மெழுகுவர்த்தி ஏத்தலாம். ஆனா பர்த்டே அன்னைக்கு பட்டாசு வெடிக்கலாம்னா அது இது மாதிரியான ரசிகர்களோட கை தட்டல்தான்.

இந்தப் படத்தோட பாட்டெல்லாம் கேட்டேன்.. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரியிருந்தது.  அதாவது ஒரு பாட்டு சூர்யா மாதிரி இருந்தது. அதாவது சூப்பரா இருந்தது.. ஒரு பாட்டு லிங்குசாமி மாதிரியே இருந்தது. அதாவது லோக்கலா இருந்தது.. இன்னொரு பாட்டு யுவன் மாதிரி யூத்புல்லா இருந்தது.. ஒரு பாட்டு திருப்பதி பிரதர்ஸ் மாதிரியிருந்தது.. அதாவது ரிச்சா.. காஸ்ட்லியா இருந்தது.. அப்புறம் ஒரு பாட்டு சமந்தா மாதிரியிருந்தது.. சமந்தான்னா ரொம்ப செக்ஸியா இருந்தது.. அந்த ‘கண் ஜாடை செய்தாளே’ பாடலை கேட்கும்போதே பார்க்கணும் தோணுது.. பார்க்கும்போது நோக்கம் மாறிருது.. இப்படி ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு மாதிரியிருந்தது..! சூர்யா பாடின அந்தப் பாட்டு அவரோட ரசிகர்கள் மாதிரி இருந்தது..!

எனக்குத் தெரிஞ்சு சூர்யா வளர, வளர சிவக்குமார் சாரோட பேரை கெடுத்துருவார் போலிருக்கு. எனக்குத் தெரிஞ்சி இந்த சினிமா இண்டஸ்ட்ரில ரொம்ப அமைதியானவர், அடக்கமானவர், பண்பானவர்னா அது சிவக்குமார் சார் மட்டும்தான்னு தெரியும். ஆனா இப்போ என்னாச்சுன்னா.. வர வர அவரை ஓவர்டேக் பண்றதே சூர்யாவோட வேலையாப் போச்சு.

நான் எந்த பங்ஷனுக்கு வந்தாலும் ஒரு ஓரமா உட்கார்ந்துடுவேன். குறுக்கப் போய் கை குடுக்கிறதுக்கு எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும். ஒரு ரெண்டு மூணு பங்ஷன்ல பார்த்துட்டேன்… நான் எங்காவது ஓரமா உட்கார்ந்துக்கிட்டிருந்தா சூர்யா வருவாரு..  ‘சார் எப்படியிருக்கீங்க?’ன்னு விசாரிப்பாரு.. இது சூர்யாதானான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஏன்னா அவர் இருக்கிற உயரத்துக்கு அவர்கிட்ட இருக்கிற பண்பு, அமைதி, அடக்கமும் இருக்குறது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்… இந்த பண்புக்காகவே அவர் நெறைய உயருவார். அதுக்காக எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்..!

இன்னைக்குக்கூட நான் ஓரமா உட்கார்ந்திருந்தேன். இன்னிக்கும் வந்து ‘அடுத்த படம் நான் உங்ககூட நடிக்கிறேன் தெரியுமா?’ன்னாரு.. அவரோட நான் நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். அப்படியிருக்கும்போது அவர் என்னோட நடிக்கிறேன்னு பெருமையா சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்கு. இதை அவரோட பர்த்டே ட்ரீட்டா நான் எடுத்துக்கிறேன்…” என்றார் பார்த்திபன்.

Our Score