ஒயிட் ஸ்கிரீன் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘பார்கவி’. இந்தப் படத்தை இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் இருக்கிறார்.
இந்தப் படத்தில் முகேஷ் என்பவர் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஸ்ரேயா என்பவர் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி, இணை இயக்குநர்கள் – பாண்டி செல்வா & ராஜி கோபி, படத் தொகுப்பு – V.J.சாபு ஜோசப், நடன இயக்கம் – ராதிகா, உடைகள் – அமல்ராஜ், புகைப்படம் – stills விஜய் மணி, மக்கள் தொடர்பு – மணவை புவன், டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ், இணை தயாரிப்பு – முகேஷ் குமார், தயாரிப்பு – V.ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன், கதை, திரைக்கதை, இயக்கம் – V.ராஜா.
இந்த பார்கவி படம் பற்றி இயக்குநரும், தயாரிப்பாளருமான V.ராஜா பேசும்போது, “படத்தின் கதாநாயகனான முகேஷ் பட்டதாரி இளைஞன். கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர்கள் இருவரும் நடிப்பு பயிற்சிகளைப் பெற்ற பின்புதான் இதில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு வரலாற்று படமாகும், பிரம்மாண்டமான படத்தை எனது அனுபவத்தையும் எனக்கு உறுதுணையாக மிக அனுபவம் வாய்ந்த இயக்குநர் பாண்டி செல்வா மற்றும் ராஜி கோபி இருவரையும் இணை இயக்குநர்களாகவும், படத்தின் பலமாக ‘அருவா சண்ட’ படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டியும் உடன் இருக்க குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இது மட்டும் அல்லாது தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் V.J.சாபு ஜோசப் இருக்கிறார். இந்த படத்தில் அனைத்து டெக்னீசியன்களும் மிகவும் அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெறிந்தவர்கள். எனவே படம் வெற்றி படமாக அமைவது உறுதி…” என்றார்.
கடந்த ஆகஸ்டு 1-ம் தேதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இந்த போஸ்டர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.