full screen background image

மலையாள இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை ‘சுட்ட’ ஏ.ஆர்.ரஹ்மான்..!

மலையாள இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை ‘சுட்ட’ ஏ.ஆர்.ரஹ்மான்..!

சமீபத்தில்தான் இந்தச் செய்தி பற்றி கேள்விப்பட்டோம்.

மலையாளப் படவுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அவுஸப்பச்சன். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர். ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது தந்தை ஆர்.கே.சேகரும்கூட இவருடன் பணியாற்றியிருக்கிறார்களாம்.

Mechery Louis Ouseppachan

அவுஸப்பச்சன் ஒரு டிவி பேட்டியில் சொல்லியிருப்பதுதான் சமீபத்தில் நமது கவனத்திற்கு வந்தது. 1992-ம் வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோ பெயரிலும்.. தான் இசையமைத்தது போலவும் ‘அந்தி மாலை’ என்னும் மியூஸிக் ஆல்பத்தை வெளியிட்டாராம்.

ஆனால் உண்மையில் இந்த இசை ஆல்பத்திற்கு இசையமைத்து வெளியிட்டது அவுஸப்பச்சன்தானாம்.. கேரளாவில் அவுஸப்பச்சன் பெயரிலும், தமிழ்நாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரிலும் இந்த இசை ஆல்பம் வெளியாகியிருக்கிறது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அவுஸப்பச்சன் ரஹ்மானிடம் பேச அவர் முதலில் பிடி கொடுக்கவில்லையாம். தன்னுடைய கவனத்திற்கே வராமல் தன்னுடைய ஸ்டூடியோவில் வைத்து யாரோ இதனை ரிக்கார்டு செய்திருக்கிறார்கள் என்று பட்டும் படாமல் பதில்  சொன்னாராம்.

உடனேயே கோபம் கொண்ட அவுஸப்பச்சன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். ‘ஜென்டில்மேன்’ படம் ரிலீஸான சமயம். இது செய்தியாக வெளிவரும் பட்சத்தில் தனது இசை வாழ்க்கை பாதிக்கப்படும் என்று போனில் அவுஸப்பச்சனிடம் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். இதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம்..

ஆனாலும் அவுஸப்பச்சன் மனம் இறங்காமல் இது பற்றி தமிழகத்தின் அனைத்து தினசரி பேப்பர்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் மூலம் ஆர்டர் வாங்கியிருக்கிறார். இதனால் அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் தினசரிகளில் ரஹ்மான் இந்த ‘அந்தி மாலை’ இசை ஆல்பம் பற்றி தன்னுடைய தவறைச் சுட்டிக் காட்டி, இதற்கு இசை உரிமை அவுஸப்பச்சனையே சேரும் என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்தாராம் ரஹ்மான்.

இதற்குப் பின்பு ரஹ்மானின் அம்மா அவுஸப்பச்சனுக்கு போன் செய்து தனது மகனை மன்னித்துவிடும்படி கெஞ்சியதால், போனால் போகிறதென்று விட்டுவிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவுஸப்பச்சன் கூறியிருக்கிறார்..!

இதனால் அறிகின்ற நீதி யாதெனில்..? சரி விடுங்க.. நமக்கு இதைவிட நிறைய வேலையிருக்கு..!

Our Score