கோட்டை கருப்பு மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிலக்கோட்டை பானு தயாரித்திருக்கும் முதல் படம் ‘ஒசரம்’.
‘கருப்பட்டி’ படத்தில் ஹீரோவாக நடித்த விஜயராஜ் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில், இவர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஸ்மிகா ஐஸ்வர்யா அப்பு குட்டி ஜூலி கர்த்தர் சுரேஷ் இமான் அண்ணாச்சி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளரான நிலக்கோட்டை பானு, இந்தப் படத்தில் பஞ்சாயத்து தலைவி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கும் டி.எஸ். திவாகர் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்ய, அசால்ட் மதுரை சண்டை இயக்கம் செய்திருக்கிறார். சக்தி படத்தொகுப்பை செய்திருக்கிறார்.
‘சினிமா கனவுகள்’, ‘கருப்பட்டி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குநரான பிரபு ராமானுஜம் இந்த ‘ஒசரம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த ‘ஒசரம்’ படம் பற்றி இயக்குனர் பிரபு ராமானுஜம் பேசும்போது,
“அண்ணன் தங்கை இருவரின் பாசத்தை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும் விறுவிறுப்பான வகையில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி எனது ஏழாவது படமாக இந்த ‘ஒசரம்’ படத்தை இயக்கிருக்கிறேன்” என்றார்.









