நடிகர் ஜெய் ஆகாஷ் வெளியிடவிருக்கும் ‘ஒறுத்தல்’ என்னும் புதிய திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
இதில் கதாநாயகனாக செந்தில் ஜெகதீசன் அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக காயத்ரி என்னும் புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றுமொரு கதாநாயகன் ஜித்தேந்தர் போலீஸ் அதிகாரியாகவும், வில்லன் வேடத்தில் பில்லா போஸ் மற்றும் சுவாதி, மகேஷ், இமாசலம் ராஜீ, ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆஷிஸ் தேவர், இசை – சதா சுதர்சனம், படத் தொகுப்பு – சி.ஷி. பிரேம், ஒலி வடிவமைப்பு – றி. லெனின், மக்கஷீமீ தொடர்பு – செல்வரகு, தயாரிப்பாளர் – ஞானஜோதி கோவிந்தராஜ், எழுத்து, இயக்கம் – கிருஷ்ணதாசன் ஜெகதீசன்.
பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கும் ஒரு தனி மனிதனின் ஆவேசம்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.
ஒரு பெண் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அதை யார் செய்தார்கள்..? எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, மூணாறு, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தை நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழகத்தில் வெளியிட இருக்கிறார்.