‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ அக்டோபர் 2-ல் ரிலீஸ்..!

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ அக்டோபர் 2-ல் ரிலீஸ்..!

விமல், சூரி, பிரியா ஆனந்த், விசாகா சிங் நடித்திருக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் உறுதி என்று அந்த பட நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்தப் படத்தை கண்ணன் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது.

கிராமத்து பின்னணியில் காதலுடன் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.. பார்ப்பதற்கும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மிக அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கின்றன.

குடும்பத்துடன் பார்க்கும்வகையிலேயே படத்தை எடுத்திருப்பதாகச் சொன்ன கண்ணன், அவர் கடைசியாக இயக்கிய ‘சேட்டை’ படத்தில் கிடைத்த அவப் பெயரை இந்தப் படம் நிச்சயமாக துடைத்தெடுக்கும் என்று உறுதியாக நம்புகிறாராம்..!

Our Score