full screen background image

சினிமா விநியோகஸ்தராகவும் மாறினார் விஷால்..!

சினிமா விநியோகஸ்தராகவும் மாறினார் விஷால்..!

நடிகர் விஷால் நடிப்போடு, சொந்த்த் தயாரிப்பையும் துவக்கி தயாரிப்பாளர் விஷாலாக மாறினார். ‘பாண்டிய நாடு’ படம் அவரது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த முதல் படம். இப்போது விநியாகஸ்தராகவும் மாறியிருக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘ஜீவா’ படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை நடிகர் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் வாங்கியிருக்கிறார்.

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் விஷால் பிலிம் பேக்டரியின் முதல் தயாரிப்பான ‘பாண்டிய நாடு’ படத்தில் பணியாற்றியவர்கள்தான்.

விஷால், சுசீந்திரன், சூரி, இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்ர் ஆண்டனி, கலை இயக்குநர் ராஜீவன் என்று முந்தைய டீம் அப்படியே இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளது.

‘ஜீவா’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இரண்டாவது படம் இதுதான்.. இதில் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். வரும் செப்டம்பர் 26-ம் தேதி படம் ரிலீஸாகும் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தனது முதல் தயாரிப்பான ‘பாண்டிய நாடு’ வெற்றியினை போல.. தனது முதல் விநியோகமான இந்த ‘ஜீவா’ படமும் விஷாலுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும் என்று வாழ்த்துகிறோம்..!

Our Score