வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பெயர் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி.
இவரின் அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் விஜய் சேதுபதிக்கு பெயர் சொல்லும் அளவுக்கு வித்தியாசமான படமாக அமையவிருக்கிறதாம்.
“இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும். இதில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இன தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். இவரது நடிப்பு திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு பெரிதும் வியந்தேன்…” என்கிறார் இப்படத்தின் இயக்குநரான ஆறுமுக குமார்.
அவர் மேலும் பேசுகையில், “படத்தில் 8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குநராக மட்டுமின்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக, மிக சுவாரசியமானது, மட்டுமின்றி மிகவும் சவாலானதும்கூட. இச்சவாலை அவர் மிக சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாண்டதை கண்டு ஆச்சரியப்பட்டு வியந்தேன்.
படம் மிக சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தாகிவிட்டது. இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் ‘ரங்கூன்’ படத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மேலும் பல உயரங்களை தொடுவர். தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே இந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தினை படமாக்கி உள்ளோம்…” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.