‘ஒரு நாள் கூத்து’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

‘ஒரு நாள் கூத்து’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தாயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ‘ஒரு நாள் கூத்து.’ 

இப்படத்தில்  தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசை ஜஸ்டீன் பிரபாகரன்.

இப்படத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய இருநூறு வருடம் பழமையான பாடலான ‘எப்போ வருவாரோ’ பாடல் இடம் பெற்றுள்ளது இப்படத்திற்கு தனிச் சிறப்பாகும்.

இப்பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு மிகவும் இனிமையான இசையை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஒரு வெட்டுகூட சொல்லாமல், சென்சாரில் யு சர்டிபிகேட் கொடுத்திருப்பதை பெருமையாகச் சொல்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

Our Score