தயாரிப்பாளர் ஆர்.செல்வம் தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஒரு முகத்திரை’.
இதில் ரஹ்மான் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஆர்.சுரேஷ், அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, ரவி, ரேகா சுரேஷ், பாண்டு ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவண பாண்டியன், படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமது, இசை – பிரேம்குமார் சிவபெருமான், கலை இயக்கம் – வினோத் ரவீந்திரன், பாடல்கள் – மதன் கார்க்கி, அண்ணாமலை, பிரியன், ஜீபீ, நடனம் – பாப்பி, அருண் குமார், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், தயாரிப்பு நிர்வாகம் – கன்னூர் நிர்மல், பி.ஆர்.ஓ. நிகில், லேப் – ரியல் இமேஜ், தயாரிப்பு – ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம் – ஆர்.செந்தில்நாடன்.
இந்தப் படத்தில் பேஸ்புக்குதான் கதாநாயகன். அதே பேஸ்புக்குதான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐ.டி. துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.
சைக்காலஜிக்கல் டாக்டரே, சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குநர் செந்தில்நாதன்.
படம் வேகமாக வளர்ந்து வருகிறது..!









