full screen background image

தமிழின் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இந்தப் படம்தானாம்..!

தமிழின் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இந்தப் படம்தானாம்..!

அமீர், சேரன், ராதாமோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும் ‘பாகன்’ படத்தை இயக்கியவருமான இயக்குநர் அஸ்லம், 15 ஆண்டு கால நண்பனும், தன்னிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான காளி ரங்கசாமிக்கு தன்னுடைய பிலிம் பாக்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ஒரு குப்பைக் கதை என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பினை தந்து அவரை தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார்.

பல படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்த அனுபவம் வாய்ந்த தினேஷ் மாஸ்டர்தான் இதில் நாயகனாக நடித்துள்ளார்.  ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படங்களில் அசாதாரண முகம் காட்டிய கதாநாயகி மணிஷா யாதவ்தான் நாயகி. காமெடிக்கு யோகிபாபு உள்ளார். நாயகனின் அம்மாவாக ஆதிரா நடிக்கிறார். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். அம்மா காளியம்மாள், அப்பா ரங்கசாமி இரண்டு பெயர்களையும் இணைத்து தன் பெயராக்கியுள்ளார். இவரது இயற்பெயர் ரபோனி கண்ணன். இவர் இயக்குநர்கள் எழில், அஸ்லம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். சேரனின் அலுவலக நிர்வாகத்திலும் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.

‘காதல்’, ‘கல்லூரி’ போன்ற படங்களிள் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். ‘அஞ்சாதே’, ‘சித்திரம் பேசுதடி’, ‘நந்தலாலா’  படங்களில் பணிபுரிந்த மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை நா,முத்துக்குமார் எழுதியுள்ளார்.

producer aslam

தயாரிப்பாளர் அஸ்லம் பேசும்போது, ”இது 43 நாட்களில் தயாரான படம். வெள்ளையான மனிதர்களின் மனசு அழுக்காக இருக்கும். அழுக்கான மனிதர்களின் மனசு வெள்ளையாக இருக்கும் என்பதை இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் குடிசைப் பகுதி மக்கள் எங்களுக்கு பெரும் உதவி செய்தார்கள். படப்பிடிப்புக்கு குடம், பாத்திரம், சாப்பாடு போன்றவற்றை கொடுத்து உதவிகள் செய்தனர். தொல்லை தரவில்லை..” என்றார்.

Director Kali Rengasamy

படம் பற்றிப் பேசிய இயக்குநர் காளி ரங்கசாமி, “நிஜமான ஒருவரின் வாழ்வில் நடந்ததையே கதையாக்கியுள்ளேன். சமுத்திரக்கனி, அமீர், மிஷ்கின் ஆகியோர் கேட்டு நடிக்க விரும்பிய கதை இது.  இது ஒரு குடும்பக் கதை.

ஒரு குப்பையான விஷயத்தை பெரிதுபடுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என்ன என்பதே திரைக்கதையின் பயணம்.

Oru Kuppaik kadhai stills (10) 

சென்னைதான் கதைக்களம். குறிப்பாக அடித்தட்டு குடிசைப் பகுதியில் கதை நடப்பதால் கூவம் நதிக்கரையோரம்தான் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தினோம். சென்னையில் பிரபலமான பல்லவன் நகர், சிந்தாதிரிப்பேட்டை குப்பங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் பல அழுக்கான பகுதிகளும் இந்தப் படத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.

இதுவொரு ஏழைப் பையன் மற்றும் பெண் சார்ந்த வாழ்க்கையினை சொல்கிறது. கதை அழுக்கான மக்கள் பற்றியதாக இருந்தாலும் காட்சிகள் அழுத்தமானதாக இருப்பதால் ரசிக்க வைக்கும்படி இருக்கும்.

Oru Kuppaik kadhai stills (8)

நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி மலையூர் என்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள். படத்தில் ஏழ்மை வருகிறது. ஆனால் படம் அது பற்றி பேசவில்லை. வாழ்க்கை பற்றியே பேசுகிறது.

Oru Kuppaik kadhai stills (11)

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு யதார்த்த அழகுக்காக பேசப்படும். மொழி தெரியாத நாம் ஈரானிய படங்களை ரசிப்பது போல, இதன் கதையை உலக சினிமா ரசிகர்கள் அனைவருமே ரசிப்பார்கள். தமிழில் இது ஒரு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்று பேசும் வகையில் யதார்த்தப் பதிவாக இருக்கும்..” என்கிறார் நம்பிக்கையோடு.

Our Score