‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் ஜூன்-2-ம் தேதி வெளியாகிறது

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் ஜூன்-2-ம் தேதி வெளியாகிறது

ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் வரும் ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞரான ரவீணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஜூன்-2-ம் தேதியன்று இந்தப் படத்தை வெளியிடவிருப்பதாக ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானி, “சர்வதேச திரைப்பட  விழாக்களில் இந்த படத்துக்கு கிடைத்த மரியாதை மிகப் பெரியது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை  பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் திரைப்படம் இது..” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Our Score