எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ‘ரங்கூன்’ படத்தின் முன்னோட்டம் மிக குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று கௌதம் கார்த்திக் நடித்த படங்களிலே அதிகம் பேர் பார்த்து ரசித்த ட்ரைலர் என்கிற பெயரை பெற்றுவிட்டது.
படத்தின் கதாநாயகி சனா மகபூல் தனது தோற்றப் பொலிவால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
பர்மா நாட்டில் யாரும் இதுவரையிலும் படம் பிடிக்காத இடங்களிலெல்லாம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (இயக்குநர் முருகதாசின் உதவியாளர்) சிரத்தை எடுத்து படம் பிடித்திருப்பது, ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.
அனிருத்தின் குரல் வளத்தில் பாடி ஏற்கெனவே வெளியான ‘பாரின் ரிட்டர்ன்’ என்கிற பாடல் ஹிட்டடித்துவிட்டது. அடுத்தாக இன்று வெளிவர உள்ள விஷால் சந்திரசேகரின் பாடல்கள் ரசிகர்கள் மனதை நிச்சயம் கவரும்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் தனி முத்திரை பதித்த fox star ஸ்டுடியோஸ் இயக்குநர் முருகதாஸின் கூட்டணி இந்த ‘ரங்கூன்’ படம் மூலம் மீண்டும் வெற்றியை அடைவது நிச்சயம்.