full screen background image

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும் T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அஸ்வினி நடித்திருக்கிறார். ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

முக்கிய வேடத்தில் ரஞ்சித் நடித்திருக்கிறார். வில்லனாக சாகர் என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார். மற்றும் ‘தலைவாசல்’ விஜய், வனிதா, பாலாசிங், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவநாராயண மூர்த்தி, சிசர் மனோகர், இந்திரன், அம்பிகா மோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : அய்யப்பன்.N

இசை : சுமன் பிச்சு

பாடல்கள் : ஏகாதசி

கலை – ஸ்ரீனி

எடிட்டிங் : சாஜன்

நடனம் : சாந்தகுமார்

ஸ்டண்ட் – ரன் ரவி

தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீகுமார்

வசனம் : பொன். பிரகாஷ்

கதை : வினோத்லால்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் – சந்தோஷ் கோபால்

தயாரிப்பு : உல்லாஸ் கிளி கொல்லூர், T. சுரேஷ்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,  “வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கதாநாயகன் சஞ்சீவ் முரளி, ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறார். அதனால் தனக்கு ஊரில் மிகப் பெரிய அந்தஸ்து கிடைக்கும் என்று நினைத்து வில்லனுடன் பழகுகிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று கதாநாயகனின் குடும்பம் அந்த வில்லனால் சந்திக்கும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை. இதை முற்றிலும் கமர்ஷியலாக, நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கிறோம். இதன் படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது..” என்றார் இயக்குநர்.

Our Score