பிரின்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் A.பிரின்ஸ் ஜோசப் தயாரிக்கும் அமானுஷ்ய படம் ‘ஓஜோ.’
இந்தப் படத்தில் புதுமுகங்கள் சிவசுந்தர் நாயகனாகவும், சுவாதி, லூபானா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
மேலும், கவிஞர் சினேகன், யோகிபாபு, மனோபாலா மொட்டை ராஜேந்திரன், திவ்யதர்ஷினி, கும்கி அஸ்வின் , இளவரசு , ரோகிணி ளொள்ளுப்பா விக்கி & தர்மா, தீனா சக்திவேல் மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் ஸ்டூடியோ, இயக்குநர் – ரவி தேவா, தயாரிப்பாளர் – A.பிரின்ஸ் ஜோசப், இணை தயாரிப்பு – நஞ்சுண்டான் பிச்சாண்டி, பாடல்கள் – கவிஞர் சினேகன், ஒளிப்பதிவு – பால பரணி, இசை – சந்தோஷ் சந்திரபோஸ், நடன இயக்கம் – ராதிகா, ஸ்ரீசெல்வி, சண்டை இயக்கம் – ஜாக் ஜான்சன், மக்கள் தொடர்பு – கிளாமர் சத்யா.
படம் பற்றி இயக்குநர் ரவி தேவா பேசும்போது, “நாயகி ப்ரியாவும், நாயகன் சிவாவும் ஒரு கிராபிக்ஸ் அனிமேஷன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். காதலித்து கல்யாணம் பண்ணிய ப்ரியாவின் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பண்ணி பிரிந்து தனித்தனியாக வாழ்வதால் ப்ரியாவிற்கு காதல் மேல் நம்பிக்கை இல்லாமல் போகிறது.
இந்த சூழலில் தொடர்ந்து ப்ரியாவை சிவா விரட்டி விரட்டி காதல் வயப்பட வைக்கிறான். இருவரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஒரு ஒன்பது வயது சிறுமி அமானுஷ்யமாக வந்து ப்ரியாவை பல விதங்களில் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சிக்கிறாள்.
சிவாவின் நண்பரான பிரபாகர் யார் இந்த சிறுமி..? அவள் ஏன் ப்ரியாவை விரட்டுகிறாள்..? என்பதை ஓஜோ போர்டு மூலம் தெரிந்து கொள்கிறார். உண்மையான காரணம் தெரிந்த சிவாவும் ப்ரியாவும் அதிர்ச்சியடைகிறார்கள்.
அவர்கள் வாழ்வில் இடையூறாக இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தியை பிரபாகர் எப்படி விரட்டுகிறார் என்பதை புதுமையான விதத்தில் இந்த கதையில் சொல்லப்பட்டு பார்ப்பவர்களை நிச்சயமாக கவரும்…” என்றார்.