அரசியலை வெளுத்து வாங்க வருகிறது ‘ஒபாமா உங்களுக்காக’ திரைப்படம்..!

அரசியலை வெளுத்து வாங்க வருகிறது ‘ஒபாமா உங்களுக்காக’ திரைப்படம்..!

‘அது வேற, இது வேற’ என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே.பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஒபாமா உங்களுக்காக.’

அரசியலை அடித்து துவைத்து காயப் போடுகிற படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக பிருத்வி நடிக்கிறார். காமெடி நடிகர் ஜனகராஜ் இதுவரை ஏற்றிராத  புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

புதுமுக நடிகையான பூர்ணிஷா நாயகியாக அறிமுகமாகிறார். திரைப்பட இயக்குநர்களாகவே விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, மற்றும் T.சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் TV புகழ் கோதண்டம், சரத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார். பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – B.லெனின், ஒளிப்பதிவு – தினேஷ் ஸ்ரீநிவாஸ், நடன இயக்கம் – சுரேஷ், சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின், தயாரிப்பு – ஜெயசீலன்.

‘பாஸ்மார்க்’ படத்தை இயக்கிய இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது பெயரை தற்போது ‘நாநி பாலா’ என்று மாற்றிக் கொண்டு  இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் நாநி பாலா பேசும்போது, “தாமஸ் ஆல்வா எடிசன் போனை  கண்டு பிடித்தது பேசுவதற்காகத்தான். ஆனால்  இன்றைய காலத்தில் ஆண்ட்ராய்ட் மொபைலில்  பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது.

இந்த ‘ஒபாமா  உங்களுக்காக’ படத்தின் கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும்.

தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள்  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது….” என்றார்.

Our Score