full screen background image

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் நிறுவனமும், ‘நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் ‘லாபம்’.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் இந்த ‘லாபம்’ படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம். 

அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார். ஸ்ருதி இந்தப் படத்தில்தான் முதன்முதலாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார்.  இவர்களோடு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும், கலையரசனும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதையே வாழ்க்கையாக கொண்ட, ‘பருத்தி வீரன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

5I3B9469

‘கண்ணான கண்ணே’ என கொஞ்சும் இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ என அறமும், அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்  இந்த ‘லாபம்’ படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது.

அதிரடி ஆக்‌ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்.. இருவரின் சினிமா வாழ்க்கையிலும் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறது படக் குழு.

முழுக்க, முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையோடு ராஜபாளையத்தில் தொடங்கியது.

Our Score