full screen background image

“6 வருடங்களாக பாலியல் உறவு இல்லை” – ஹாலிவுட் நடிகையின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்

“6 வருடங்களாக பாலியல் உறவு இல்லை” – ஹாலிவுட் நடிகையின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்

பிரபலமான ஹாலிவுட் நடிகை ட்ரூ பேர்ரிமோர். 47 வயதான இவர் இதுவரையிலும் 3 முறை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர். இவருக்கு ஆலிவ் மற்றும் பிராங்கி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தற்போது அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சியில் ‘தி ட்ரூ பேர்ரிமோர் ஷோ’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அதில் அவர் பேசும்போது, “நான் விவாகரத்து பெற்ற 2016-ம் ஆண்டில் இருந்து யாருடனும் பாலியல் உறவில் ஈடுபடவில்லை. சிலர் திருமணத்தில் இருந்தோ அல்லது ஓர் உறவில் இருந்தோ வெளியேறிய சில வருடங்களில் மற்றொரு உறவில் கலந்து விடுவார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. நான் நியாயம் பேசவில்லை. அவர்களது வாழ்க்கை பயணங்களை நான் கொண்டாடவே செய்கிறேன். ஏனெனில், சிலருக்கு அது சாத்தியப்படுகிறது. ஆனால், எனக்கு அது சரியாக வரவில்லை.

அதே சமயம் நான் பாலியல் உறவை வெறுக்கவில்லை. என் முழு வாழ்க்கையிலும் தேடியதில் இருந்து, அன்பு மற்றும் பாலியல் உறவு இரண்டும் வேறுபட்ட விசயங்கள் என்பதை கடைசியில் அறிந்து கொண்டேன்.

நீங்கள் வளர்ந்து, திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் வந்த பின், உங்களது வாழ்வின் மீதமுள்ள பகுதியை ஒருவருடனேயே கழிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதுண்டு. இல்லையா? ஆனால் அது நடக்காதபோது… அது எனது மனதில் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது. இப்போது எனது மகள்களுக்காகவே வாழ்வது என்ற உறுதியில் இருக்கிறேன்…” என்று பேர்ரிமோர் கூறியுள்ளார்.

Our Score